இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள்: அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை
இஸ்ரேலில் வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட அவசர தேவைகள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இஸ்ரேலில் பணிபுரியும் அல்லது வேறு காரணங்களுக்காக தங்கியிருக்கும் இலங்கையர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பின் அல்லது அது தொடர்பான வேறு ஏதேனும் சிரமங்கள் இருப்பின், இலங்கை அதிகாரிகளுக்கு நேரடியாகத் அறிவிப்பதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, தொலைபேசி எண் (+94) 117966396, வாட்ஸ்அப் எண் (+94) 767463391 அல்லது opscenga@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் தேவையான தகவல்களை அறிய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்றுக்கொள்ளப்பட்ட குடிவரவு குடியகல்வு நடைமுறைகள் மற்றும் வேறு எந்த முறையின் கீழும் இஸ்ரேலில் தங்கியுள்ள எந்தவொரு இலங்கையருக்கும் இந்த சேவையைப் பெற முடியும் எனவும் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.