இலங்கை

இலங்கை – ஹட்டனில் 200 அடி பள்ளத்தில் விழுந்த கார்… பெண்ணொருவர் வைத்தியாசலையில்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு குழுவை ஏற்றிச் சென்ற கார் ஒன்று வீதியை விட்டு விலகி 200 அடி பள்ளத்தில் விழுந்தது.காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு அருகில் வாகனம் கவிழ்ந்துள்ளது.

காரில் பயணித்த பெண் ஒருவர் காயமடைந்து திக் ஓயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து நேற்று (06) மாலை ஹட்டன் மஸ்கெலியா பிரதான வீதியில் நோர்வூட் நியூவெலிகம பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மஸ்கெலியா பிரதேசத்தில் இடம்பெற்ற இறுதிச் சடங்கு ஒன்றில் பங்கேற்றுவிட்டு கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதிக்கு திரும்பிச் சென்ற கார் ஒன்று இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

எதிர்திசையில் இருந்து வந்த பஸ்ஸுக்கு வழிவிட முற்பட்ட போது கார் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது காரில் ஒரு சிறு குழந்தை உட்பட 4 பேர் இருந்துள்ளனர்.வாகனத்தில் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் ஒருவருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்