ஐரோப்பா

ஸ்பெயினின் முன்னாள் போக்குவரத்து அமைச்சருக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை

ஸ்பெயினின் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் ஜோஸ் லூயிஸ் அபாலோஸுக்கு ( José Luis Ábalos) அந்நாட்டின் உச்சநீதிமன்றம் 24 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கோவிட்-19 பெருந்தொற்றின் போது முகக்கவசம் வழங்குவதில்  ஊழல் செய்ததாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே அவர் சிறை தண்டனை பெற்றுள்ளார்.

மேலும், அவரது முன்னாள் உதவியாளர் கோல்டோ கார்சியாவுக்கு 19 ஆண்டுகளும், தொழிலதிபர் விக்டர் டி அல்டாமாவிற்கு (Víctor de Aldama) நான்கரை ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை செய்து ஒருமித்த கருத்தின் அடிப்படையில் மேற்படி தீர்ப்பை அறிவித்துள்ளனர்.

இந்த மூவரும் ஊழல் நடைமுறைகள் மூலம் நிதிப் பலன்களைப் பெறும் நோக்கில், தெளிவாக வரையறுக்கப்பட்ட பணிகளுடன் ஒரு குற்றவியல் அமைப்பை உருவாக்கியதாகக் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்