ஐரோப்பா

பிரான்ஸில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்களுக்கு எதிராக புதிய சட்டம்

இலவசக் கொண்டாட்டங்கள்” என்று அழைக்கப்படும், அங்கீகரிக்கப்படாத திறந்தவெளி டெக்னோ இசை ஒன்றுகூடல்கள் தொடர்பான சட்டத்தை கடுமையாக்க பிரான்ஸ் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பொது அமைதிக்கு இடையூறு விளைவிப்பதற்கு எதிரான சட்டமூலத்தை உருவாக்குவது தொடர்பில் பிரான்ஸின் தேசிய சட்டமன்றம் இன்று ஆய்வு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

பொது அமைதி, பாதுகாப்பு மற்றும் சமாதானத்தை சீர்குலைக்கும் பிரச்சினைகளுக்கு உடனடி பதில்களை” கொண்டு வர வேண்டும் என்று உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனெஸ் (Laurent Nuñez ) வலியுறுத்தியதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையை வலதுசாரி சட்டமியற்றுபவர்கள் வரவேற்றுள்ளனர்.

இந்தச் சட்ட வரைவு, சிரிப்பு வாயு பயன்பாடு முதல் ஆக்கிரமிப்பு வரை பலதரப்பட்ட நடைமுறைகளைக் கையாள உள்ளது. ஆனால், குறிப்பாக இலவசக் கொண்டாட்டங்கள் தொடர்பான பிரிவின் மீது கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்