அமெரிக்காவின் படைத்தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்
மத்தியக்கிழக்கில் அமைந்துள்ள படைத்தளங்கள் மீது ஈரான் நேற்றிரவு தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் அறிக்கையில், ஈரான் குறிவைக்க முயன்றதாகக் கூறப்பட்ட சரியான இடம் குறிப்பிடப்படவில்லை.
ஈரானிய நலன்களுக்கு எதிரான அமெரிக்க நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக, ஜோர்டானில் உள்ள ஒரு அமெரிக்க விமானத் தளம் மற்றும் அமெரிக்க இராணுவ மத்திய கட்டளையக மையம் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் வீசப்பட்டதாக ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது.
ஜோர்டானில் உள்ள ஒரு அமெரிக்கத் தளத்தை நோக்கி ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாகவும், அந்த ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டதாகவும் ஆக்சியோஸ் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




