தென்கொரியா, ஈரான் வெளிவிவகார அமைச்சர்கள் மந்திராலோசனை!
ஈரான் மற்றும் தென்கொரிய ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையில் தொலைபேசிமூலம் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
ஈரான்மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் தொடுத்த போர் ஆக்கிரமிப்பு குறித்து இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.
அத்துடன், இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய சூழல் தொடர்பிலும் இரு நாட்டு அமைச்சர்களும் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
அதேவேளை, நிரந்தர போர் நிறுத்தத்துக்கான ராஜதந்திர நகர்வுகளுக்கு தென்கொரியா ஆதரவளிக்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.





