ஐரோப்பா

ஜெர்மனியில் அதிர்ச்சி – கத்தியால் குத்திக் கொண்ட பாடசாலை மாணவர்கள்

ஜெர்மனி நாட்டில் பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான வன்முறை சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.

மீல வெல்ட் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்கள் இருவர் இடையே கத்தி குத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடந்த 25ஆம் திகதி ஜெர்மனியின் நோற்றின்பிஸ்பாலின் மாநிலத்தில் உள்ள மீல வெல்ட் பிரதேசத்தில் உள்ள ஆட் ஃவை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கின்ற 13 வயதுடைய மாணவன் ஒருவன் 12 வயது மாணவன் ஒருவனை கத்தியால் குத்தி படுகாயத்தை ஏற்படுத்தியதாக தெரியவந்து இருக்கின்றது.

இவ்வாறு படுங்காயம் அடைந்த இந்த 12 வயது சிறுவனானவர் பின்னர் வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இந்த சிறுவன் மிகவும் ஆபத்தான கட்டத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த கத்தி குத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருவதாக தெரியவந்துள்ளது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்