ஐரோப்பா

பிரான்ஸில் சிறைச்சாலைக்குள் கைதியின் சடலம் – எரிந்த நிலையில் மீட்கப்பட்டமையால் அதிர்ச்சி

பிரான்ஸில் சிறைச்சாலை ஒன்றில் இருந்து எரிந்த நிலையில் கைதி ஒருவரது சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Nanterre (Hauts-de-Seine) சிறைச்சாலையிலேயே இச்சம்பவம் வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

சிறைச்சாலைக்குள் திடீரென தீ பரவியதாகவும், தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

40 வரையான கைதிகள் வெளியேற்றப்பட்டதன் பின்னரே தீயணைப்பு பணிகள் மேற்கொள்ள முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதையடுத்து தீ அணைக்கப்பட்டது. அதன் முடிவில் கைதி ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் சிறைவைக்கப்பட்டிருந்த 35 வயதுடைய கைதி ஒருவரே பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்