CJP ஒருங்கிணைப்பாளர்களின் தடுப்பு காவல் நீடிப்பு
காக்ரோச் ஜனதா கட்சியின் CJP இணை ஒருங்கிணைப்பாளர்களான சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோரின் நீதிமன்றக் காவலை மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டித்து டெல்லி சிறப்பு நீதிமன்ற நடுவர் உத்தரவிட்டுள்ளார்.
டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த ஒக்டோபர் 13ஆம் திகதி போராட்டம் நடத்தியதாகக் கூறி இருவரும் கைது செய்யப்பட்டனர்.
ஐந்து நாட்கள் காவல் முடிவடைந்த நிலையில், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். காவலை மேலும் ஐந்து நாட்களுக்கு நீட்டிக்க காவல்துறை கோரிய நிலையில், நீதிமன்றம் இரண்டு நாட்கள் மட்டுமே நீட்டித்தது.
இதற்கிடையில், ஜாமீன் ஆவணங்களில் புகைப்படப் பொருத்தமின்மை மற்றும் அடிப்படைத் தகவல்கள் விடுபட்டிருந்தமை உள்ளிட்ட காரணங்களால் இருவரின் ஜாமீன் மனுக்களும் நிராகரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கை ஏமாற்றமளிப்பதாக இருவரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளதுடன், பண்டிகைக் காலத்தில் அவர்களைச் சிறையில் வைத்திருக்கும் நோக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டெல்லி ஆம் ஆத்மி தலைவர் சவுரப் பரத்வாஜ் விமர்சித்துள்ளார்.
இருவருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட இரண்டு வழக்குகளில் ஒன்று, அதன் தீவிரத்தன்மை காரணமாகக் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.




