ஐரோப்பா

புகையிலை மீதான வரிக்கு ஜெர்மன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல்

ஜெர்மன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புகையிலை மீதான கணிசமான வரி உயர்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.

இதன் காரணமாக, இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் சிகரெட் பாக்கெட்டுகளின் விலை 11 யூரோவை தாண்டக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது 2027 மற்றும் 2030-க்கு இடையில் அரசுக்கு €12 பில்லியனுக்கும் அதிகமான வருவாயை ஈட்டித் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை குளிர்பானங்கள் மீதான புதிய சர்க்கரை வரி ஜூலை 2027 முதல் அமலுக்கு வரும். கூட்டாட்சி சுகாதாரக் காப்பீட்டு மானியங்களில் ஏற்படும் குறைப்புகளை ஈடுசெய்யவும், ஆண்டுதோறும் ஏற்படும் €2.1 பில்லியன் சுகாதாரச் செலவுகளைச் சமாளிக்கவும் இது உதவும் எனக் கூறப்படுகிறது.

இதற்கமைய 100 மில்லிலிட்டருக்குக் குறைந்தது ஐந்து கிராம் சர்க்கரை கொண்ட பானங்களுக்கு இந்த வரி விதிக்கப்படும்.

அதேநேரம் ஸ்பிரிட்ஸ், ஸ்பார்க்லிங் ஒயின் மற்றும் ஆல்கோபாப்ஸ் மீதான வரிகள் 2027 முதல் 20 சதவீதம் அதிகரிக்கப்பட உள்ளன.  இதன் மூலம் நூற்றுக்கணக்கான மில்லியன் யூரோக்கள் வருவாய் ஈட்டப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், பீர் மற்றும் ஸ்டில் ஒயின் மீதான வரிகள் மாற்றமின்றி தொடரும்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்