ஐரோப்பா

3,00,000 டன் தானியங்களை அழித்துள்ள ரஷ்யா; உக்ரைன் குற்றச்சாட்டு!

FILE PHOTO: A combine harvests wheat in a field near the village of Zghurivka, amid Russia’s attack on Ukraine, in Kyiv region, Ukraine August 9, 2022. REUTERS/Viacheslav Musiienko/File Photo

போரில், சுமார் 3,00,000 டன் தானியங்களை ரஷ்யா அழித்திருப்பதாக உக்ரைன் அரசு குற்றம் சாட்டியுள்ளது.

உக்ரைன்- ரஷ்யா இடையிலான போர் 20வது மாதமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போர் தாக்குதலைத் தொடர்ந்து ரஷ்யா தனது தானிய ஒப்பந்தத்தில் இருந்து விலகியது. இதனால் உக்ரைனில் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி வைக்க வேண்டிய தானிய ஏற்றுமதி முற்றிலுமாக தடைபட்டது. ரஷ்யாவின் இந்த செயலுக்கு ஐக்கிய நாடுகள் சபை முதல் பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தது.

இதற்கிடையில் ரஷ்யாவின் தடையை மீறி உக்ரைன் கருங்கடல் வழியாக தானிய ஏற்றுமதியை சமீபத்தில் உக்ரைன் அரசு தொடங்கியுள்ளது. இந்நிலையில், ஜூலை முதல் தற்போது வரை சுமார் 3,00,000 லட்சம் டன் உக்ரைனிய தானியங்களை ரஷ்யா அழித்திருப்பதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.

Russia-Ukraine War: Ukraine Says Grain Destroyed By Russia. Quantity: Upto 300,000  Tonnes

ரஷ்யா தானிய ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய பிறகு, இதுவரை 17 மிகப்பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது. அதில் மொத்தம் 3,00,000 லட்சம் டன் தானியங்களை ரஷ்யா அழித்திருப்பதாகவும், உக்ரைனின் மறுசீரமைப்பு துணை பிரதமர் ஒலெக்சாண்டர் குப்ராகோவ் தெரிவித்துள்ளார்.

அதே சமயம் 25 தானியக் கப்பல்கள் உக்ரைன் உருவாக்கிய தற்காலிக கருங்கடல் வழிப்பாதைக்குள் நுழைந்துள்ளது. அவற்றில் 21 கப்பல்கள் ஏற்றுமதிக்காக காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தங்கள் பொருளாதாரம் சற்று மேம்படும் என்று உக்ரைன் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்