இந்தியா செய்தி

ரூ. 20 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்; 520 மருந்துக்கடை உரிமங்கள் ரத்து

போதைப்பொருள் சட்ட மீறல்களுக்கு எதிரான தனது நடவடிக்கைகளை பஞ்சாப் அரசு தீவிரப்படுத்தியுள்ளது. உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் (FDA) மருந்துப் பிரிவு, 2025 ஏப்ரல் 1 முதல் 2026 செப்டம்பர் 30 வரையிலான காலப்பகுதியில் மொத்தம் 16,788 ஆய்வுகளை மேற்கொண்டது.

போதைப்பொருள் சட்ட மீறல்களுக்கு எதிரான தனது நடவடிக்கைகளை பஞ்சாப் அரசு தீவிரப்படுத்தியுள்ளது. உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் (FDA) மருந்துப் பிரிவு, 2025 ஏப்ரல் 1 முதல் 2026 செப்டம்பர் 30 வரையிலான காலப்பகுதியில் மொத்தம் 16,788 ஆய்வுகளை மேற்கொண்டது.

இக்காலப்பகுதியில், உரிமம் பெற்ற மற்றும் பெறாத 214 நிறுவனங்களிடமிருந்து ரூ. 20.64 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், 1940-ஆம் ஆண்டின் மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் சட்டம் மற்றும் 1945-ஆம் ஆண்டின் மருந்து விதிகளை மீறியதற்காக 520 மருந்துக்கடை உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதுடன்செய்யப்பட்டுள்ளதோடு, 22 கடைகளின் உரிமங்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

சட்டத்தை மீறியவர்கள் மீது 54 நீதிமன்ற வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும், அதில் 35 வழக்குகளில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்ட நீதிமன்றங்களில் தற்போது 650 வழக்குகள் விசாரணையில் உள்ளன.

பழக்கவழக்கத்தை ஏற்படுத்தக்கூடிய (habit-forming) மருந்துகளின் தவறான பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ‘ப்ரிகபாலின்’ (Pregabalin) மருந்தை 1945-ஆம் ஆண்டு மருந்து விதிகளின் அட்டவணை H1-ன் கீழ் மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இந்த புதிய விதி 2026 நவம்பர் 12 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி