விளையாட்டு

தோனியின் பெரிய சாதனையை சமன் செய்த ரோஹித் சர்மா..!

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா 26 பந்துகள் மீதமிருக்க 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இந்த போட்டியில் இந்தியாவுக்காக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷிவம் துபே அரைசதம் அடித்து அணியை வெற்றி பெற செய்தனர். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ரோஹித் ஷர்மா தோனியின் மிகப்பெரிய சாதனையை சமன் செய்து முக்கிய சாதனைகளை தனது பெயரில் பதிவு செய்துள்ளார்.

ரோஹித் இதுவரை 53 டி20 போட்டிகளில் கேப்டனாக விளையாடி 41-ல் வெற்றியும், 12-ல் தோல்வியும் அடைந்துள்ளார்.

இதற்கு முன், எம்எஸ் தோனி இந்திய கேப்டனாக மொத்தம் 72 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 41-ல் வெற்றி பெற்றுள்ளார். 28-ல் தோல்வியை சந்தித்துள்ளார். இது தவிர மூன்றாவது இடத்தில் உள்ள விராட் கோலி 50 போட்டிகளில் விளையாடி 30-ல் வெற்றியும், 16-ல் தோல்வியும் அடைந்துள்ளார்.

SR

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ