இலங்கை

தங்கக் கடனுக்கான உச்சபட்ச வரம்பில் கட்டுப்பாடு : இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு!

வாகனக் கடன் மற்றும் தங்கக் கடன்களுக்கான  தற்போதைய அதிகபட்ச LTV விகிதங்களை மேலும் கடுமையாக்க இலங்கை மத்திய வங்கியின் ஆளுகை சபை தீர்மானித்துள்ளது.

புதிய விதிகள் நாளைய தினம் முதல் அமலுக்கு வரவுள்ளன.

இதற்கமைய உரிமம் பெற்ற வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் தங்கக் கடன்களுக்கான அதிகபட்ச கடன் மதிப்பு விகிதம் (LTV) 70 சதவீதமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் மோட்டார் வாகனங்களுக்காக வழங்கப்படும் கடன் வசதிகளுக்கான தற்போதைய அதிகபட்ச கடன் மதிப்பு வரம்புகள் (LTV limits) மேலும் 10 சதவீத புள்ளிகளால் குறைக்கப்பட்டுள்ளன.

தங்கம் மற்றும் வாகனக் கடன்கள் அண்மைக்காலமாக மிக வேகமாக அதிகரித்து வருவதால், அது நிதி அமைப்பில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!