பொழுதுபோக்கு

“புஷ்பா” வெற்றி நாயகனுடன் இணைகின்றார் ஸ்டைலிஸ் ஹீரோ ராம் சரண்

இயக்குனர் எஸ். எஸ். ராஜமௌலியின் ‘ஆர் ஆர் ஆர்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, ராம் சரண் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடித்து வந்த கேம் சேஞ்சர் திரைப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து தேர்தல் முடிந்த பின்னர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

மேலும் தன்னுடைய 16-ஆவது படத்தை இயக்குனர் புஜ்ஜி பாபு சனாவுடன் நடிக்க உள்ளார் ராம் சரண். இந்த படம் கடந்த வாரம் பூஜையுடன் துவங்கியது. இந்த படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக, ஜான்வி கபூர் நடிக்கிறார்.

மேலும் இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளராக தெலுங்கு திரையுலகில் அடியெடுத்து வைக்கிறார் போனி கபூர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஒருபுறம் தீவிரமாக நடந்து வரும் நிலையில் ராம் சரணின் 17-ஆவது படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

இந்த படத்திற்காக இயக்குநர் சுகுமாருடன் ராம் சரண் இணைந்திருப்பது.. இவரது திரையுலக பயணத்தில் புதிய மைல்கல்லை குறிக்கிறது. ‘ஆர் ஆர் ஆர்’ படத்தின் பிளாக் பஸ்டர் ஹிட்டிற்கு பிறகு ராம்சரண் உலகளாவிய நட்சத்திரமாக உயர்ந்தபோது..

இயக்குநர் சுகுமார் அவரது இயக்கத்தில் வெளியான ‘புஷ்பா’ படத்தின் வெற்றியால் பெரும் புகழை பெற்றார் என்பது அனைவரின் அறிந்ததே.

இவர்கள் இருவரும் இணையும் திரைப்படத்தின் தயாரிப்பு பணிகள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. பெயரிடப்படாத இந்த திரைப்படம் 2025 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் பிரம்மாண்டமாக வெளியிடுவதை இலக்காகக் கொண்டிருக்கிறது. ‘ரங்கஸ்தலம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ராம்சரண் -சுகுமார் -மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் ‘ராக்ஸ்டார்’ டிஎஸ்பி கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. இந்தத் திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

(Visited 5 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content