இலங்கை

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்ட யோசனைக்கு பொது நிதிக் குழு அனுமதி!

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்தின் யோசனைக்கு பொது நிதிக்கான குழு ஒப்புதல் அளித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையிலான பொது நிதி தொடர்பான குழு இன்று (30) இந்த அனுமதியை வழங்கியது.

இதேவேளை, உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்டம் தொடர்பில் நாளைய தினம் மாத்திரம் கலந்துரையாடி வாக்கெடுப்பு நடத்தப்படும் என கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பான குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கட்சித் தலைவர்களின் பங்களிப்புடன் இந்தக் குழு கூடியது.

இதேவேளை, நாளை காலை 9.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்டம் தொடர்பான யோசனை குறித்து கலந்துரையாடவும், மாலை 7.30 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாளை மறுதினம் பாராளுமன்ற அமர்வை நடத்துவதில்லை எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தகவல் தொடர்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்