ஐரோப்பா

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ரஷ்யாவின் கம்சட்கா Kamchatka  தீபகற்பத்திற்கு அருகில் 6.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று அதிகாலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் தூர கிழக்கு கம்சட்கா பகுதியில் உள்ள ஓசெர்னோவ்ஸ்கி  Ozernovskiy என்ற குடியிருப்புக்கு வடகிழக்கே 76 கி.மீ தொலைவில் குறித்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) குறிப்பிட்டுள்ளது.

கம்சட்கா தீபகற்பம், உலகின் மிகவும் நில அதிர்வு மிகுந்த பகுதிகளில் ஒன்றான பசிபிக் நெருப்பு வளையத்தில் அமைந்துள்ளது.

பூமியின் மேற்பரப்பிற்குக் கீழே உள்ள டெக்டோனிக் தட்டுகளின் நகர்வு காரணமாக இப்பகுதியில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.

கம்சட்கா சமீபத்திய ஆண்டுகளில் பல பெரிய நிலநடுக்கங்களைச் சந்தித்துள்ளது. ஜூலை 2025-ல், இந்தத் தீபகற்பத்திற்கு அப்பால் 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ஜப்பான் மற்றும் ஹவாய் உட்பட பசிபிக் பகுதியின் சில இடங்களில் சுனாமி எச்சரிக்கைகளையும், மக்களை வெளியேற்றும் உத்தரவுகளையும் தூண்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்