உலகம்

வியட்நாமில் கடும் மழை – வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு நால்வர் உயிரிழப்பு

வியட்நாமின் வடக்கு மாகாணமான லை சாவில் உள்ள  மலைக் கிராமத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 04 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நான்கு பேரை காணவில்லை என்றும்  அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வியட்நாமின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்குகள் சாலைகள், மின் கட்டமைப்புகள் மற்றும் நூற்றுக்கணக்கான வீடுகளைச் சேதப்படுத்தியதோடு, அப்பகுதியில் 238 ஹெக்டேர் பயிர்களையும் மூழ்கடித்துள்ளதாக அரசாங்கத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது.

வியட்நாமில்  ஜூலை முதல் செப்டம்பர் வரையான காலப்பகுதியில் மழைவீழ்ச்சி அதிகளவில் பதிவாகும். கடந்த ஆண்டில் இவ்வாறான ஒரு மழைப் பொழிவால் சுமார் , 489 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்