இலங்கை

கடந்த 24 மணிநேரத்தில் மூவர் மரணம் – டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த போராடும் அரசு

நாட்டில் டெங்கு தொற்றால் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் குறைந்தது 03 பேர் டெங்கு தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து டெங்குவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு (NDCU) வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, இந்த ஆண்டு இதுவரை பதிவான மொத்த டெங்கு பாதிப்புகளின் எண்ணிக்கை 74,478 ஆக உயர்ந்துள்ளது.

ஜூலை மாதத்தின் முதல் 17 நாட்களில் மட்டும் மொத்தம் 19,100 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மேற்கு மாகாணம் தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான டெங்கு பாதிப்புகளைப் பதிவு செய்து வருகிறது. குறிப்பாக கம்பஹா மாவட்டத்தில் அதிகளவிலான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்