நாட்டின் நான்கு வலயங்களுக்கு மின்வெட்டு
நாட்டில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு இலங்கையின் நான்கு வலயங்களில் ஒரு மணிநேர மின்வெட்டை நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் தேசிய மின் கட்டமைப்புச் செயல்பாட்டாளர் (NSO), இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடமும் (PUCSL) எரிசக்தி அமைச்சகத்திடமும், இன்று (19) இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.
தேசிய மின் கட்டமைப்புச் செயல்பாட்டாளரின் (NSO) முதன்மைச் செயல் அதிகாரியின் கூற்றுப்படி, இந்த மூன்று நாட்களிலும் மாலை 4:30 மணிக்கும் இரவு 8:30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் மின்வெட்டு இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




