இலங்கை

சம்மாந்துறையில் காட்டுயானைகளினால் அல்லலுறும் மக்கள் விடுத்துள்ள கோரிக்கை

காட்டுயானைகளின் வருகையை கட்டுப்படுத்துவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என பொறியியலாளர் உதுமான்கண்டு நபீர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

”சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட கிராம சேவையாளர் பிரிவு‌ 08 இல் ஒரே நாளில் யானை தாக்கி 4 இடங்கள் சேதமடைந்துள்ளதோடு இன்று அதிகாலை தனியான் யானை ஒன்றும் வந்து சென்றுள்ளது

சம்மாந்துறை 08 கிராம சேவையாளர் பிரிவில் உள் நுழைந்த காட்டு யானை அப் பிரதேசத்தில் பயிர்களை சேதப்படுத்தியதோடு வீட்டின் சுவர்களும் உடைக்கப்பட்டு வீட்டில் உள் நெல் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நெல் மூட்டைகளும் சேதப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வருடம் காட்டுயானை தாக்குதலுக்கு உட்பட்டு 3 நபர்கள் உயிரிழந்துள்ளதோடு
இவ்வாறு நாளாந்தம் காட்டு யானைகள் இரவு வேளைகளில் நுளைந்து சேதங்களை ஏற்படுத்துவதன் காரணமாக மக்கள் அச்சமடைந்தவர்களாக உள்ளனர்.

அதனால், காட்டுயானைகளின் வருகையை கட்டுப்படுத்துவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்” என்றார்.

 

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்