செய்தி விளையாட்டு

2023 டயமண்ட் லீக் போட்டியில் அமெரிக்காவின் நோ லைல்ஸ் வெற்றி

2023 டயமண்ட் லீக் சமீபத்தில் பிரான்சின் பாரிஸில் நடைபெற்றது.

உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் திரண்டிருந்த 100 மீட்டர் போட்டியில் அமெரிக்காவின் நோவா லைல்ஸ் வெற்றி பெற்றார்.

அந்த பந்தயத்தை 9.97 வினாடிகளில் ஓடி முடித்தார். இரண்டாவது இடத்தை கென்யாவின் ஃபெர்டினாண்ட் ஒமயாலா 9.98 வினாடிகளில் ஓடி முடித்தார்.

இந்நிகழ்வில், ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற இத்தாலியின் மார்செல் ஜேக்கப்ஸ் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது. அவர் பந்தயத்தை 7வது இடத்துடன் முடித்தார்.

இதேவேளை, பெண்களுக்கான 5,000 மீற்றர் ஓட்டப் போட்டியில் கென்யாவின் ஃபிர்த் கிபிகோன் புதிய உலக சாதனையைப் படைத்து வெற்றியீட்டினார்.

போட்டியை 14 நிமிடங்கள் 05.20 வினாடிகளில் ஓடி முடித்தார்.

அவர் 1,500 மீட்டர் போட்டியில் புதிய உலக சாதனை படைத்தார்.ஒரு வாரத்தில் 5,000 மீட்டர் போட்டியில் உலக சாதனையை புதுப்பித்தார்.

மேலும், ஆண்களுக்கான 3,000 மீட்டர் ஸ்டீபிள் சேஸில் கானாவின் லமேச்சா கிர்மா 7 நிமிடம், 52.11 வினாடிகளில் பந்தயத்தை முடித்து புதிய உலக சாதனையை நிகழ்த்தினார்.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி