அகதிகளை குடியேற்றுவதற்கு எதிர்ப்பு – பிடிங்டனில் சட்டப்பூர்வமற்ற வாக்கெடுப்பு
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக நகரத்திலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள பிடிங்டன் (Piddington) கிராமத்திற்கு அருகில் புகலிடக் கோரிக்கையாளர்களை குடியேற்றுவதை எதிர்த்து “சுதந்திரத்திற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. பெரும்பான்மையான மக்கள் இதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 312 வாக்குகள் எண்ணப்பட்டதில், 285 பேர் பிரித்தானியாவில் இருந்து பிரிந்து செல்வதற்கு ஆதரவாக வாக்களித்ததாக கிராமத்தின் நிர்வாகக் குழு (parish council) அறிவித்துள்ளது. வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குச்சீட்டில், “ஐக்கிய இராச்சியத்திலிருந்து பிரிந்து செல்வதற்கும், சுயநிர்ணய உரிமையைப் பெறுவதற்கும் பிடிங்டன் மேற்கொள்ளும் […]





