இலங்கை

ஒத்திவைக்கப்பட்ட தேர்தல்களில் ஒன்றை விரைவில் நடத்த வேண்டும்: மஹிந்த தேசப்பிரிய

ஒத்திவைக்கப்பட்ட தேர்தல்களில் ஒன்று செப்டெம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படும் என எதிர்பார்ப்பதாக உள்ளூராட்சி, மாகாண மற்றும் பாராளுமன்ற மட்டத்திலான தொகுதிகளை மீள் நிர்ணயம் செய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

உலக ஜனநாயக தினம் செப்டெம்பர் 15ஆம் திகதி அனுசரிக்கப்படுகிறது. “உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் ஒத்திவைக்கப்படுவது நாட்டின் ஜனநாயகம் தொடர்பான பிரச்சினையாகும்” என தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபை அல்லது உள்ளூராட்சி சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு அதிகாரிகள் ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், மாகாண சபைகளை ஆளுநர்களின் கீழ் நிர்வகிப்பதும், உள்ளூராட்சி சபைகளை ஆணையாளர்களின் கீழ் நிர்வகிப்பதும் சட்டவிரோதமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்