பிரதமரை கடுமையாக விமர்சித்த நைஜல் ஃபரேஜ்
அமெரிக்காவிற்கான பிரித்தானிய தூதுவராக மண்டேல்சனை நியமித்தமை தொடர்பாக, ரிஃபார்ம் யுகே (Reform UK) தலைவர் நைஜல் ஃபாரேஜ் (Nigel Farage) பிரதமரை கடுமையாக விமர்சித்துள்ளார்.
மத்திய லண்டனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
எச்சரிக்கை அறிகுறிகள் எதுவும் இல்லையென பிரதமர் கூறுவதை நம்பமுடியவில்லையென்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், 2025 செப்டம்பரில் வெளியான ஒரு செய்தியை மேற்கோள் காட்டி, மண்டேல்சன் தனது தகுதிச் சோதனையில் தோல்வியடைந்ததாகவும் குறிப்பிட்டார்.
மேலும், இந்த நியமனத்தின் தகுதிச் சோதனை தொடர்பாக பிரதமர் ஹவுஸ் ஆஃப் காமன்ஸை தவறாக வழிநடத்தியிருக்கலாம் என்ற வலுவான சந்தேகமும் இருப்பதாக நைஜல் ஃபாரேஜ் தெரிவித்துள்ளார்.





