ஹோர்முஸ் ஜலசந்தி முற்றுகை – 27 கப்பல்களை திருப்பி அனுப்பிய அமெரிக்கா!
ஏப்ரல் 13 அன்று அமெரிக்க இராணுவம் ஹோர்முஸ் ஜலசந்தியை முற்றுகையிட்டதிலிருந்து இதுவரை சுமார் 27 கப்பல்கள் ஈரான் துறைமுகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளை மையம் X-இல் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையே நிச்சயமற்ற பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில், அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இஸ்லாமாபாத்தில் இருப்பது, ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகப் போகிறது என்பதற்கான அறிகுறி அல்ல என்று அரபு பெர்ஸ்பெக்டிவ்ஸ் இன்ஸ்டிடியூட்டின் ( Arab Perspectives Institute) நிறுவன இயக்குநரான ஸெய்டன் அல்கினானி (Zeidon Alkinani) தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதா அல்லது அதை நீட்டிப்பதா என்பதை உயர்மட்டப் பேச்சுவார்த்தையாளர்கள் முடிவு செய்வார்கள் எனக் குறிப்பிட்ட அவர், மோதலை முடிவுக்க கொண்டுவர நாம் முயற்சி செய்கிறொம் என்பதை சர்வதேச சமூகத்திற்கு காண்பிக்கவே அவர்கள் முயல்கிறார்கள் எனவும் கூறியுள்ளார்.




