சரிகமபவில் கதறி அழுத ஈழத்து சிறுமி வர்ஜா!
“Golden Performance கொடுக்க முடியாது… ஆனால் உனக்கு எலிமினேஸன் (Elimination) இல்லை ” என சரிகமப நிகழ்ச்சியில் ஈழத்து சிறுமி வர்ஜாவை பார்த்து நடுவர் ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் சரிகமபவில் Legends சுற்று இடம்பெற்றது. போட்டியாளர்கள் பலரின் பாடல் தேர்வு நடுவர்களை ஆச்சரியப்படுத்தியிருந்தது.
அந்த வகையில், இலங்கையில் இருந்து சென்ற போட்டியாட்டியாளர் வர்ஜா “இதழில் கதை எழுதும் நேரமிது” என்ற பாடலை பாடினார்.

அவரின் குரலில் சில நடுக்கம் இருந்தது. உடல் நிலை சரியில்லாத போதும் தன்னால் முடிந்த வரை பாடியிருந்தார்.
பாடி முடித்ததும் எலிமினேட் ஆகிவிடுவோம் என கண்ணீர் விட்டு மேடையில் கதறி அழுதார்.

உடனே நடுவர் ஸ்ரீனிவாஸ்… நீ முன்பு அருமையான Performance கொடுத்திருக்கின்றாய்… நடுவர்கள் அனைவரும் சேர்ந்து முடிவேடுத்தோம். உன்னை எலிமினேசன் செய்ய மாட்டோம். நீ நல்ல ஆரோக்கியமாக இருந்திருந்தால் மிக சிறப்பாக பாடியிருப்பாய். இந்த நாள் வித்தியாசமானது.. நீ கவலைப்பட வேண்டாம் என ஆறுதல் கூறினார்.
எனவே மீண்டும் வர்ஜாவுக்கு வாய்ப்பு கிடைத்திருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. நிச்சம் அவர் இனி வரும் வாரங்களில் அருமையாக பாடுவார் என ரசிகர்கள் அவரை வாழ்த்தி வருகின்றனர்.




