இலங்கை செய்தி

முன்னாள் ஜனாதிபதி ரணிலை சந்தித்தார் சீனத் தூதுவர்

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வேய் ஹுவாசியாங் (Wei Huaxiang), முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

கொழும்பு, பிளவர் வீதியில் அமைந்துள்ள ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

பொறுப்பேற்ற சீனத் தூதுவர், முக்கிய சந்திப்புகளை நடத்திவருகின்றார். இதன்ஓர் அங்கமாகவே ரணிலுடனான சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பில் தூதுவருடன், பிரதித் தூதுவர் சூ யான்வேய் (Zhu Yanwei), ஆலோசகர் மேய் ஜிங் (Mei Jing) மற்றும் செயலாளர் ஜின் என்ஸே (Jin Enze) ஆகியோரும் கலந்துகொண்டனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை புதிய சீனத் தூதுவர் கடந்தவாரம் சந்தித்து பேச்சு நடத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை