விளையாட்டு

இவ்வருடம் கூகுளில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்கள்

உலகின் முன்னணி தேடுப்பொறி சேவை வழங்கும் நிறுவனம் கூகுள். உலகளவில் 2023 ஆண்டு அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்களின் டாப் 10 பட்டியலை வெளியிட்டு உள்ளது.

இந்த பட்டியலில் அதிசயிக்கும் வகையில் கிரிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி போன்ற முன்னணி கால்பந்து வீரர்கள் இடம்பெறவில்லை.

இதுதவிர இந்திய கிரிக்கெட் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரும் டாப் 10 பட்டியலில் இடம்பிடிக்கவில்லை.

ஆனாலும் உலகளவில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்களின் டாப் 10 பட்டியலில் ஒரேயொரு இந்திய வீரர் இடம்பிடித்துள்ளார்.

வளர்ந்து வரும் இந்திய கிரிக்கெட் வீரரான சுப்மன் கில் தனது அசாத்திய ஃபார்ம் மூலம் இந்திய அணியில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார்.

அந்த வகையில், உலகளவில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்கள் பட்டியலில் சுப்மன் கில் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளார்.

இந்த பட்டியலில் எட்டாவது இடத்தில் நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்திரா இடம்பெற்றுள்ளார்.

அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்கள் டாப் 10 பட்டியல்:

1 – டமர் ஹேம்லின்

2 – கிலியன் எம்பாப்பே

3 – டிராவிஸ் கெல்ஸ்

4 – ஜா மொரண்ட்

5 – ஹேரி கேன்

6 – நோவக் ஜோகோவிக்

7 – கார்லோஸ் அல்காரஸ்

8 – ரச்சின் ரவீந்திரா

9 – சுப்மன் கில்

10 – கைரி இர்விங்

(Visited 2 times, 1 visits today)

Prasu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ

You cannot copy content of this page

Skip to content