இலங்கை செய்தி

மேர்வின் சில்வா, தமிழர்கள் மீது பயங்கரமான இனவெறியை வெளிப்படுத்தியுள்ளார்! செல்வராஜா கஜேந்திரன்

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் வடக்கு கிழக்கில் உள்ள விகாரைகள் பாதுகாக்கப்பட்டதாகவும், சேதமடையவில்லை என்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு மாகாணங்களில் உள்ள விகாராதிபதிகள் மீது கை வைத்தால், அவ்வாறு செய்யும் தமிழர்களின் தலைகளுடன் களனிக்கு வர நேரிடும் என மேர்வின் சில்வா தெரிவித்த கருத்து தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே கஜேந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா, தமிழர்கள் மீது பயங்கரமான இனவெறியை வெளிப்படுத்தியுள்ளார்.

விகாரைகள் தாக்கப்படுவதாகவும், மகாநாயக்கர்கள் தாக்கப்படுவதாகவும் அப்பட்டமான பொய்யை கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் காலத்தில் வழிபாட்டு தளங்கள் பாதுகாக்கப்பட்டு, எந்த இடத்திலும் சேதப்படுத்தப்படவில்லை.

கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்தை தாக்கிய புலிகளுக்கு வடக்கு கிழக்கில் உள்ள கோவில்களை அழிப்பது கடினமான காரியம் அல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.

 

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை