தட்டம்மை நோய்த் தாக்கம் – வங்கதேசத்தில் 500இற்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி!
வங்காளதேசத்தில் ஏற்பட்ட தட்டம்மை நோய்த் தாக்கத்தால் 500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் வெளியிட்டுள்ள புதிய தரவுகளில் தெரியவந்துள்ளது.
தலைநகர் டாக்காவில் உள்ள மருத்துவமனைகள் நோயாளிகளின் எண்ணிக்கையால் திணறி வருவதாகவும், தீவிர சிசிச்சைப் பிரிவுகளில் படுகை பற்றாக்குறை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 13 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும், இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களில் தெரியவந்துள்ளது.
இதற்கிடையே நோயை கட்டுப்படுத்த நாடாளாவிய ரீதியில் தடுப்பூசி போடும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் திட்டம் தற்போது 1.8 கோடி குழந்தைகளைச் சென்றடைந்துள்ளதாக யுனிசெஃப் தலைவர் ராணா ஃப்ளவர்ஸ் தெரிவித்துள்ளார்.




