வோல்கர் டர்க்கின் பதவிக்காலம் மேலும் 04 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு
ஐ.நா. மனித உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க்கின் பதவிக்காலம் மேலும் 04 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா மற்றும் இஸ்ரேலின் எதிர்ப்பு மற்றும் அமெரிக்கா ஐ.நாவிற்கான நிதியுதவியை குறைப்பதாக அச்சுறுத்தியதை தொடர்ந்து ஐ.நா. பொதுச் சபை இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளது.
குட்டெரெஸின் இந்தத் திட்டத்திற்கு 144 நாடுகள் ஆதரவாகவும், 10 நாடுகள் எதிராகவும் வாக்களித்து, 13 நாடுகள் வாக்களிப்பை புறக்கனித்துள்ளன.
உக்ரைனில் ரஷ்யாவின் போர் மற்றும் காசாவில் இஸ்ரேலின் நடத்தை ஆகியவற்றின் வெளிப்படையான விமர்சகரான டர்க், அமெரிக்க குடிவரவுக் காவலில் ஏற்படும் மரணங்கள் குறித்து விசாரணை நடத்தவும் அழைப்பு விடுத்துள்ளார்.
பெரும் வல்லரசுகளை எதிர்க்கும் அவரது மனப்பான்மைக்காக, இந்த மூன்று நாடுகளிடமிருந்தும் அவர் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்திருந்தார்.
இந்த வாக்கெடுப்பு, ட்ரம்ப் நிர்வாகத்திற்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையே ஆழமடைந்து வரும் மோதலை எடுத்துக்காட்டுகிறது.





