இந்தியா

மணிப்பூர் வன்முறை: ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழுவின் அறிக்கைகள் தாக்கல்

மணிப்பூர் வன்முறை விவகாரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி கீதா மிட்டல் தலைமையிலான குழு மூன்று அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மணிப்பூரில் கடந்த 3 மாதங்களாக வன்முறை வெடித்து வருகிறது. இந்நிலையில் குகி சமூகத்தைச் சேர்ந்த 2 பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்த விடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே மணிப்பூர் வன்முறை சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றம் மூன்று ஓய்வு பெற்ற நீதிபதிகள் கொண்ட விசாரணைக் குழுவை நியமித்தது. 3 பேர் கொண்ட குழு வன்முறை தொடர்பாக விசாரணை, இழப்பீடுகள், மறுவாழ்வு உதவி உள்ளிட்டவை குறித்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் கலவரம் தொடர்பாக ஓய்வு பெற்ற 3 பெண் நீதிபதிகள் அடங்கிய குழு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

TJenitha

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே