ஐரோப்பா

சைப்ரஸில் உள்ள பிரித்தானிய படைத்தளத்தை உளவு பார்த்த நபர் கைது – நாடுகடத்த தீர்மானம்

சைப்ரஸில் உள்ள பிரித்தானியாவின் விமானப் படைத் தளத்தை உளவு பார்த்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரித்தானிய -அசர்பைஜான் இரட்டைக் குடியுரிமை பெற்ற நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படைக்கு உளவுத் தகவல்களை வழங்கியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பில் பிரித்தானிய பொலிஸார் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், வடக்கு லண்டனின் இஸ்லிங்டனைச் சேர்ந்த 44 வயதான ரஷாத் சுல்தானோவ், ஜூலை 17 அன்று சைப்ரஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார் என்றும், அவரை நாடு கடத்தும் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதால் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும்   தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு மே 11 முதல் ஜூன் 22 வரை சைப்ரஸில் உள்ள பிரிட்டனின் RAF அக்ரோதிரி தளத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து, பயங்கரவாத எதிர்ப்பு காவல்துறையினரால் நடத்தப்பட்ட விசாரணையின் ஒரு பகுதியாக இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்