ஆசியா

ஓரின சேர்க்கையை ஆதரிக்கும் சுவிஸ் நிறுவன தயாரிப்புகளுக்கு தடை விதித்த ம

மலேசியாவில் ஓரின சேர்க்கை என்பது தண்டனைக்குரிய குற்றம் ஆகும். ஓரின சேர்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. இந்த சூழலில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த கைக்கடிகார தயாரிப்பு நிறுவனம் தங்களின் தயாரிப்புகள் மூலமாக மலேசியாவில் ஓரின சேர்க்கையை ஊக்குவித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து கடந்த மே மாதம் மலேசியாவில் உள்ள சுவிட்சர்லாந்து நிறுவனத்துக்கு சொந்தமான கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் ஓரின சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்த கைக்கடிகாரங்கள், கடிகாரங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த நிலையில் ஓரின சேர்க்கையை ஆதரிக்கும் குறிப்பிட்ட அந்த சுவிட்சர்லாந்து நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மலேசியாவில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி அந்த நிறுவனத்தின் கைக்கடிகாரங்கள் மற்றும் கடிகாரங்களை வைத்திருக்கும் நபர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என மலேசியா அரசு எச்சரித்துள்ளது.

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்