பொழுதுபோக்கு

விடாமுயற்சி படத்தின் ஹார்ட் டிஸ்க்கை தொலைத்த லைக்கா? இது புது ட்ரென்டா இருக்கே…

லைக்கா நிறுவனம் இப்போது இந்தியன் 2, வேட்டையன், விடாமுயற்சி ஆகிய படங்களை தயாரித்துக் கொண்டிருக்கிறது. இதில் இந்தியன் 2 ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

அதேபோல் சூப்பர் ஸ்டாரின் வேட்டையனும் பரபரப்பாக உருவாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் கடந்த வருடம் அறிவிக்கப்பட்ட விடா முயற்சி இன்னும் தத்தளித்து வருகிறது.

இப்படத்திற்கு அடுத்து அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி படமே பொங்கலுக்கு வெளிவரும் என அறிவிக்கப்பட்டு விட்டது. ஆனால் விடாமுயற்சியின் நிலை தான் கேள்விக்குறியாக இருக்கிறது.

இதனால் நொந்து போன ரசிகர்களும் லைக்காவை காணவில்லை என போஸ்டர் அடிக்கும் அளவுக்கு வந்து விட்டார்கள்.

அதாவது விடாமுயற்சி படத்தின் ஹார்ட் டிஸ்க் காணாமல் போய்விட்டது. அதனாலேயே படப்பிடிப்பு தாமதமாகிறது என்ற காரணம் தற்போது சொல்லப்படுகிறது.

ஆனால் இந்த காரணம் முதல் முறை கிடையாது. இப்படி தான் 2.O படப்பிடிப்பின் போதும் சொன்னார்கள். அதை தொடர்ந்து லால் சலாம் படம் தோல்வி அடைந்த பிறகு ஐஸ்வர்யா ஹார்ட் டிஸ்க் காணவில்லை என கூறினார்.

இப்போது மூன்றாவது முறையாக விடாமுயற்சிக்கும் இதே காரணத்தை லைக்கா சொல்கிறது. உண்மையில் திட்டமிட்டபடி படத்தை முடிக்க முடியவில்லை.

ஆனால் அதை சொல்லி பெயரை கெடுத்துக்க விரும்பாமல் லைக்கா இப்படி ஒரு உருட்டை உருட்டி இருக்கின்றனர்.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்