இலங்கை செய்தி

100 அடி பள்ளத்தில் வீழ்ந்து இரண்டாக உடைந்தது லொறி: இருவர் படுகாயம்!

நுவரெலியா மாவட்டம், லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிந்துலை, லெமனியர் தோட்டத்தில் கனரக லொறியொன்று சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதியும், உதவியாளரும் படுகாயம் அடைந்துள்ளனர்.

மொனறாகலை வெல்லவாய பகுதியில் இருந்து ஹட்டனிலுள்ள தேயிலை தொழிற்சாலையொன்றுக்கு விறகு ஏற்றிவந்த லொறியொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் லொறி இரண்டாக உடைந்து கடுமையாக சேதமடைந்துள்ளது.

படுகாயமடைந்த சாரதியும், உதவியாளரும் லிந்துலை வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் லிந்துலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!