இலங்கை

கடற்கொள்ளையர்களால் முற்றுகையிடப்பட்ட எண்ணெய் கப்பல் – சிக்கிக்கொண்ட இலங்கையர்!

சோமாலியக் கடற்கரைக்கு அப்பால் கடற்கொள்ளையர்களால் கப்பலில் இலங்கையை சேர்ந்த ஒருவரும் அடங்குவதாக தெரியவந்துள்ளது.

17 பேர் கொண்ட பணியாளர் குழுவில் ஒரு இலங்கையர், 10 பாகிஸ்தானியர்கள், நான்கு இந்தோனேசியர்கள், ஒரு இந்தியர் மற்றும் ஒரு மியான்மர் நாட்டவர் ஆகியோர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

18,500 பேரல்கள் எரிபொருளை ஏற்றிச் சென்ற அந்தக் கப்பல்,  சோமாலியக் கடற்கரையிலிருந்து சுமார் 30 கடல் மைல் தொலைவில் பயணித்துக் கொண்டிருந்தபோது, ​​துப்பாக்கி ஏந்தியவர்களால் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அந்தக் கப்பலும் அதன் 17 பணியாளர்களும் தற்போது கடற்கொள்ளையர்களின் கட்டுப்பாட்டில் சோமாலியக் கடற்கரைக்கு அருகில் உள்ளனர்.

இருப்பினும், சோமாலிய அதிகாரிகளோ அல்லது சோமாலியக் கடற்கரையில் கடற்கொள்ளை எதிர்ப்பு நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் ஐரோப்பிய கடற்படையோ இவ்விவகாரம் குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை எதையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!