ஐரோப்பா முக்கிய செய்திகள்

பிரித்தானியாவின் பாதுகாப்பு விவரங்கள் கசிவு : முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கைது!

பிரித்தானியாவின்  பாதுகாப்பு தொடர்பான விவரங்களை நாடாளுமன்ற ஊழியர் ஒருவர் கசிய விட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த வாரம் கணினியை தவறாக பயன்படுத்துதல் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் 1990 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இன்று அவை உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்திய  சபாநாயகர் சர் லிண்ட்சே ஹோய்ல், இந்த கைது நடவடிக்கையை உறுதிப்படுத்தினார்.

அத்துடன் காவல்துறை விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அவையில் மேலதிக விவரங்கள் குறித்து விவாதிக்கப் போவதில்லை என்றும்  அவர் தெரிவித்துள்ளார்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்