இலங்கை

இலங்கை: லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை இன்று (04) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 12.5 கிலோகிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 160 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 3,680 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

5 கிலோகிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 65 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,477 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது

ட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைப்பினை தொடர்ந்தே லாஃப்ஸ் நிறுவனம் இதனை அறிவித்துள்ளது.

அதன்படி இதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 150 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.அதன் புதிய விலை ரூ. 3,790.

5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை ரூ. 60 குறைக்கப்பட்டது. புதிய விலை – ரூ. 1,522.

2.3 கிலோ லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை ரூ. 28 குறைக்கப்பட்டது. புதிய விலை – ரூ. 712 ஆகும்

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்