பொழுதுபோக்கு

தக் லைஃப் படத்தில் ஒன்று இல்லை மூன்று… ஆண்டவர் செய்யப்போகும் அட்டகாசம்

விக்ரம் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதை அடுத்து உற்சாகமடைந்த கமல் தொடர்ந்து படங்களில் நடிப்பதும், படங்களை தயாரிப்பதும் என பிஸியாக இருக்கிறார்.

தற்போது அவர் மணிரத்னத்தின் தக் லைஃப் படத்தில் நடித்துவருகிறார். ஷங்கர் இயக்கத்தில் நடித்திருக்கும் இந்தியன் 2 படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்தச் சூழலில் தக் லைஃப் படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

கமல் ஹாசனும் மணிரத்னத்தும் இணைந்து ஏற்கனவே நாயகன் என்ற கல்ட் க்ளாசிக் படத்தை கொடுத்திருக்கிறார்கள்.

அந்தப் படம் இன்றுவரை சிறந்த அடையாளங்களில் ஒன்றாக இருக்கிறது. தற்போது அவர்கள் இருவரும் மீண்டும் இணைவதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இப்படத்தை ராஜ்கமல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம், ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்நிலையில் தக் லைஃப் படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி இப்படத்தில் அவர் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கிறாராம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு படத்தின் அடுத்த அப்டேட்டிலோ அல்லது அடுத்த போஸ்டரிலோ கண்டிப்பாக இடம்பெறும் என்று படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவிக்கிறது. இதனால் கமல் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கின்றனர்.

(Visited 3 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content