திருக்கோணேஸ்வர ஆலயம் காணி உரிமை தொடர்பில் வழக்கு தாக்கல்!
திருக்கோணேஸ்வர ஆலயம் அமைந்துள்ள பகுதி மற்றும் அருள்மலையை உள்ளடக்கிய 18 ஏக்கர் 01 ரூட். 29 பேச்சஸ், கணிதுண்டும், பாபநாச தீர்த்தம் அமைந்துள்ள 03 ஏக்கர் 02 ரூட் 01 பேர்ச்சஸ் காணித்துண்டும் , மற்றும் கோட்டைவாசல் பிள்ளையார் அமைப்புள்ள 26 பேர்சஸ் உள்ளடங்கிய காணிதுண்டும் திருகோணேஸ்வர ஆலயத்துக்கு சொந்தமானவை என வெளிப்படுத்தவும் அவற்றுக்கான பாரதீனப்படுத்தல்கட்டளையை (vesting Order) திருக்கோணேஸ்வஸ்ர ஆலய நம்பிக்கை பொறுப்பாளர் சபைக்கு வழங்க கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டத்தரணி திலகரெட்ணம் துஷ்யந்தன் தலமையிலான திருக்கோணேஸ்வர ஆலய நிர்வாக சபையினரால் இந்த வழக்கு தாக்கல் கடந்த 29 ம் திகதி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள ஆலய நம்பிக்கை பொறுப்பாளர் சபையின் தலைவர் சட்டத்தரணி திலகரெட்ணம் துஷ்யந்தன், 1950 ம் ஆண்டிலிருந்து இன்றுவரை காலத்துக்கு காலம் பல்வேறுபட்ட அரச கெடுபிடிகள் மற்றும் தொல்பொருள் கெடுபிடிகள் அத்துமீறிய கையகப்படுத்தல்கள் என்பவற்றை கட்டுபடுத்தி ஆலயத்தின் ராஜகோபுர கட்டுமானம் மற்றும் இதர அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.





