ஸ்பெயினுடன் பகையை வளர்க்கும் இத்தாலி – இடைநிறுத்தப்பட்ட பயண திட்டத்தை நீட்டிக்க முடிவு
ஸ்பெயினுடனான கட்டுப்பாடற்ற பயண ஏற்பாட்டை இடைநிறுத்தும் முடிவை மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்க இத்தாலி தீர்மானித்துள்ளது.
அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
“உள்நாட்டுப் பாதுகாப்பிற்குத் தொடர்ந்து குறிப்பிடத்தக்க அபாயங்கள் இருப்பதாலும், பயங்கரவாதிகள் ஊடுருவக்கூடிய சாத்தியக்கூறுகளுடன் தொடர்புடைய அச்சுறுத்தல் நிலவுவதாலும்” இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சகம் கூறியது.
அண்டை நாடான மொராக்கோவிலிருந்து ஸ்பெயினின் கட்டுப்பாட்டில் உள்ள ‘சியூட்டா’ (Ceuta) பகுதிக்குள் குடியேறிகள் அத்துமீறி நுழைந்ததை தொடர்ந்து ஸ்பெயினுடான பயண திட்டத்தில் இத்தாலி மாற்றத்தை கொண்டுவந்தது.
இது இரு இராஜதந்திர உறவில் விரிசலை ஏற்படுத்த காரணமாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.



