இலங்கை செய்தி

NPP தேர்தல் பிரச்சாரத்துக்கு புலம்பெயர் தமிழர்கள் நிதியுதவி? அரசு மறுப்பு

தேசிய மக்கள் சக்திக்கு தேர்தல் பிரசாரத்துக்காக புலம்பெயர் தமிழர்கள் (டயஸ்போராக்கள்) நிதி உதவி வழங்கியதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா முன்வைத்த குற்றச்சாட்டுகளை அரசாங்கம் இன்று (15) முற்றாக நிராகரித்துள்ளது.

தேசிய மக்கள் சக்திக்கு தேர்தல் பிரசாரத்துக்காக புலம்பெயர் தமிழர்கள் (டயஸ்போராக்கள்) நிதி உதவி வழங்கியதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா முன்வைத்த குற்றச்சாட்டுகளை அரசாங்கம் இன்று (15) முற்றாக நிராகரித்துள்ளது.

பொய்யான அறிக்கைகளை வெளியிட்டதற்காக அர்ச்சுனா எம்.பி.க்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பேரணியில், தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் அர்ச்சுனா எம்.பி. வெளியிட்டதாகக் கூறப்படும் கருத்துகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் ஜயதிஸ்ஸ, இது தொடர்பில் பொலிஸார் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.

இச் சம்பவம் தொடர்பாக உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை