ஐரோப்பா

AI-ஆல் ஜனநாயத்திற்கும் ஆபத்து – பிரித்தானியாவின் பாதுகாப்பு செயலாளர் எச்சரிக்கை

“உண்மைக்கும் புனைவுக்கும், பிரச்சாரத்திற்கும் யதார்த்தத்திற்கும் இடையிலான வேறுபாட்டைப் பொதுமக்கள் கண்டறிவது கடினமாக இருக்கும் ஒரு சூழல், ஜனநாயகத்திற்கு ஆபத்தானதாகும்” என்று பாதுகாப்புச் செயலாளர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் குறிப்பிட்டுள்ளார்.

புதிய ‘தகவல் பாதுகாப்புக்கான தேசிய மையம்’ (National Centre for Information Defence) அமைப்பதற்கான திட்டங்களை பிரிட்டன் பிரதமர் ஆண்டி பர்னம் அறிவித்திருந்தார்.

இது தொடர்பில் பிபிசி ரேடியோ 4-இடம் கருத்து வெளியிட்ட அவர் மேற்படி கூறினார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், சமீப காலத்தில் பிரத்தானியாவிலும், நட்பு நாடுகளிலும் தகவல் தொழில்நுட்பத்தில் தாக்குதல் நடத்தப்படுவதை நாம் அனைவரும் உணர்ந்துள்ளோம்.

“பொய்களையும் தவறான தகவல்களையும் பரப்புவதற்கும், மக்களின் அச்சங்களைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதற்கும் ரஷ்ய அமைப்புகள் தங்களுக்குக் கிடைத்த எல்லா வழிகளையும் பயன்படுத்தியுள்ளன.

2019 பொதுத் தேர்தல், பிரெக்ஸிட் வாக்கெடுப்பு ஆகியவை மொஸ்கோ தலையிட முயன்ற சந்தர்ப்பங்களாகும். முந்தைய கன்சர்வேடிவ் அரசாங்கம் இந்தக் குற்றச்சாட்டுகளை விசாரிக்கத் தவறியதற்காக விமர்சனங்களையும்  எதிர்கொண்டது.

இந்நிலையில் பிரதமர் ஆண்டி பர்னம், வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் தவறான தகவல்களும் இணையவழித் தாக்குதல்களும்  மேலும் மோசமடையும் என்று எச்சரித்துள்ளார்.

“இன்று, இந்த வகையான விரோதமான அரசு தகவல் தாக்குதல்களைக் கண்டறிந்து, அவற்றின் மூலத்தைக் கண்டறிந்து, முறியடிப்பதற்காக ஒரு புதிய தேசிய தகவல் பாதுகாப்பு மையத்தை அமைக்கும் பணியைத் தொடங்குமாறு நமது பாதுகாப்புத் தலைவர்களுக்கு நான் பணிக்கிறேன்,” என்று  கூறினார்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்