உலகம்

அன்டோனியோ குட்டெரஸுடனான அனைத்துத் தொடர்புகளையும்  துண்டித்த இஸ்ரேல்!

இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் தடுப்பு மையங்களில் இருந்த பாலஸ்தீன கைதிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமைக்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் இருப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

பாலியல் குற்றச்சாடடுகள் காரணமாக  கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளமைக்கு கண்டனம் தெரிவித்த இஸ்ரேல் ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் அன்டோனியோ குட்டெரஸுடனான அனைத்துத் தொடர்புகளையும்  துண்டித்துள்ள நிலையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய தூதர்  டேனி டானன் (Danny Danon ) இது தொடர்பில் தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். ஷ

இஸ்ரேலைக் கறுப்புப் பட்டியலில் சேர்ப்பதும், பாலியல் வன்முறையை ஒரு போர்க்கருவியாகப் பயன்படுத்துவதாக எங்கள் மீது குற்றம் சாட்டுவதும் ஒரு அதிர்ச்சியளிக்கும் முடிவு,” என்று அவர் விவரித்துள்ளார்.

“பொதுச்செயலாளரும் அவரது குழுவும் இஸ்ரேலுக்கு எதிராகப் பொய்களைத் தொடர்ந்து பரப்பி வருகின்றனர். எங்களையும் ஹமாஸ் பயங்கரவாதிகளையும் ஒரே பட்டியலில் சேர்ப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

“இந்த நடவடிக்கை, ஐ.நா.வின் உண்மையான இயல்புக்கு மேலும் ஒரு சான்றாகும்: இது தனது ஸ்தாபகக் கொள்கைகளைக் கைவிட்டு, இஸ்ரேலைத் தனது முதன்மை நோக்கமாகத் திட்டமிட்டு குறிவைக்கும் ஒரு அரசியல்மயமாக்கப்பட்ட மற்றும் ஊழல் நிறைந்த அமைப்பாகும்,” என்று இஸ்ரேலின் செய்தித் தொடர்பாளர் ஓரன் மார்மோர்ஸ்டீன் (Oren Marmorstein) விமர்சித்துள்ளார்.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!