ஐரோப்பா

பிரான்ஸில் கலவரங்களுக்கு இடையே கொட்டித் தீர்த்த மழை – பல பகுதிகளில் வெள்ளம்

தென்கிழக்கு பிரான்ஸில் சீரற்ற வானிலை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதுவரை 400 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் (Météo-France) தெரிவித்துள்ளது.

இதில் 75 வயது முதியவர் ஒருவர் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டு, சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவருடைய சடலம் சான்-மித்ர்-லெ-ரம்பார் (Saint-Mitre-les-Remparts) நகராட்சியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஹோட்-கோர்ஸ் (Haute-Corse) பகுதியில், கிசோனாச்சியா (Ghisonaccia) என்ற இடத்தில் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

நான்கு சக்கர வாகனத்தில் சென்ற இருவர், பியூம்’ஓர்பு (Fium’orbu) ஆற்றில் வாகனத்தோடு அடித்துச் செல்லப்பட்டதாக கூறுப்படுகிறது.

குறித்த வாகனத்தில் இருவர் பயணித்த நிலையில் ஒருவர் ஜன்னல் வழியாக பாய்ந்து தப்பித்ததாகவும், மற்றொருவர் காணாமல்போயுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவரை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் மார்சேய் (Marseille) நகரத்திற்கு மேற்கே சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இஸ்த்ரே பகுதியில் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே சீரற்ற வானிலை காரணமாக போக்குவரத்து தடைஏற்பட்டுள்ளதுடன் சில சாலைகள் மூடப்பட்டுள்ளன. அத்துடன் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்