ஹார்முஸ் நீரிணையை முழுமையாக கட்டுப்படுத்த ஈரான் வியூகம்!
ஹார்முஸ் நீரிணையின் முழுமையான கட்டுப்பாட்டைப் ஈரான் ராணுவம் பொறுப்பேற்கும் வகையில் புதிய சட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.
இதற்கமைய மேற்படி நீரிணை வழியாகச் செல்லும் பகைமை நாடுகளின் கப்பல்களைத் தடுக்கவும் அதன் நிர்வாகத்தை முறைப்படுத்தவும் ஈரான் திட்டமிட்டுள்ளது.
தேசிய பாதுகாப்புக் குழுவின் தலைவரான எப்ராஹிம் அசிசி, Ebrahim Azizi ஹார்முஸ் நீரிணை ஏற்கனவே ஈரானியப் படைகளின் கண்காணிப்பில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த கடல்வழிப் போக்குவரத்து மூலம் ஈட்டப்படும் லாபங்கள் அனைத்தும் ஈரானிய ரியால் மதிப்பிலேயே பெறப்பட வேண்டும் என புதிய சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.
ஈரானின் இந்த நடவடிக்கை பிராந்திய ரீதியான தனது அதிகாரத்தை நிலைநாட்டும் முயற்சியாகக் கருதப்படுகிறது. அண்டை நாடுகளுடனான கடல்சார் உறவுகளில் இது ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.





