செய்தி

ஈரான் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மதிக்கத் தவறிவிட்டது – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

President Donald Trump speaks during a meeting with Irish Prime Minister Leo Varadkar in the Oval Office of the White House, Thursday, March 12, 2020, in Washington. (AP Photo/Evan Vucci)

ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்காததன் மூலம், ஈரான் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மதிக்கத் தவறிவிட்டதாக டொனால்ட்  ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

கப்பல் போக்குவரத்துப் பாதை பெரும்பாலும் முடங்கியே இருப்பதாகக் கூறும் நிபுணர்களும் இந்தக் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் தனது ட்ரூத் சோசியல் மீடியாவில் கருத்து வெளியிட்டுள்ள ட்ரம்ப், ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் செல்ல அனுமதிப்பதன் மூலம் ஈரான் மிகவும் மோசமாக, சிலர் கூறுவது போல் கண்ணியமற்ற முறையில் செயல்படுகிறது. இது நாம் செய்துகொண்ட ஒப்பந்தம் அல்ல!” எனத் தெரிவித்துள்ளார்.

லெபனான் மீதான இஸ்ரேலியத் தாக்குதல்களை நிறுத்துவது ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஈரான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன.

இருப்பினும் லெபனான் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற நிலையில், இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் பலவீனமான நிலையை எட்டியுள்ளது.

 

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி