செய்தி விளையாட்டு

IPL Match 47 – டெல்லி அணி படுந்தோல்வி

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

பேட்டிங்கை துவங்கிய டெல்லி அணிக்கு துவக்க வீரர்களான பிரித்வி ஷா மற்றும் ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் முறையே 13 மற்றும் 12 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த அபிஷேக் பொரெல் 18 ரன்களில் ஆட்டமிழக்க, ஷாய் ஹோப் 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.

கேப்டன் ரிஷப் பண்ட் 20 பந்துகளில் 27 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். இவருடன் ஆடிய அக்சர் பட்டேல் 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.

கடைசியில் நிதானமாக விளையாடிய குல்தீப் யாதவ் 34 ரன்களை குவித்தார். போட்டி முடிவில் டெல்லி அணி 9 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களை சேர்த்தது.

154 ரன்களை துரத்திய கொல்கத்தா அணிக்கு பில் சால்ட் மற்றும் சுனில் நரைன் சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர். இருவரும் முறையே 68 மற்றும் 15 ரன்களை குவித்தனர். அடுத்து வந்த ரிங்கு சிங் 11 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இவரை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் மற்றும் வெங்கடேஷ் அய்யர் சிறப்பாக ஆடினர். இருவரும் முறையே 33 மற்றும் 26 ரன்களை குவித்தனர்.

இதன் காரணமாக கொல்கத்தா அணி 16.3 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களை குவித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டெல்லி சார்பில் அக்சர் பட்டேல் இரண்டு விக்கெட்டுகளையும், வில்லியம்ஸ் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

(Visited 3 times, 1 visits today)

Prasu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content